கடந்த 10 மாதங்களுக்கு முன் முதலமைச்சர் வழிகாட்டுதலின்படி, 3 அமைச்சர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட தங்களது கோரிக்கைகளை தாமதமின்றி நிறைவேற்ற வலியுறுத்தி தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் தமிழகம் முழுவதும் இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தை தொடங்கினர்.
முதலமைச்சர் வாக்குறுதி அளித்தும் பங்களிப்பு ஓய்வூதியம் ரத்து, ஈட்டிய விடுப்பு ஒப்படை ஊதியம் வழங்குதல், காலிப்பணியிடம் நிரப்புதல் போன்ற 10 அம்ச கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை என சங்கத்தினர் தெரிவித்தனர்.
இப்போராட்டத்தினால் மதுரை, கிருஷ்ணகிரி, கன்னியாகுமரி, கள்ளக்குறிச்சி உள்பட ஏராளமான மாவட்டங்களில் அரசு அலுவலகங்கள் பணியாளர்கள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.