பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய ரயில் நிலையங்கள் அமைக்கப்படுவதால் உள்ளூர் பொருட்களை சந்தைப்படுத்தும் வாய்ப்பு அதிகரித்துள்ளதாக ஆளுநர் ஆர்.என்.ரவி கூறினார்.
அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் தமிழகத்தில் 34 ரயில் நிலையங்கள் உள்பட நாட்டில் 554 ரயில் நிலையங்களை சீரமைக்கும் பணியை பிரதமர் மோடி காணொலி காட்சி வாயிலாக துவங்கி வைத்தார்.
சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற ஆளுநர் ஆர்.என்.ரவி, அனைத்து துறைகளிலும் வேகமாக முன்னேறி வரும் இந்தியாவில் கடந்த 10 ஆண்டுகளில் 25 கோடி பேர் ஏழ்மையிலிருந்து மீட்கப்பட்டுள்ளதாக கூறினார்.