சென்னை புதுவண்ணாரப்பேட்டையில் பெண் எஸ்.ஐ-க்கு கொலைமிரட்டல் விடுத்ததாக திமுக நிர்வாகிகள் ரமேஷ், அருண் ஆகியோர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், மேலும் இருவரை தேடிவருகின்றனர்.
முகவர்கள் கூட்டத்தின் பின் தெருவில் சண்டையிட்டுக்கொண்ட திமுகவினரை தடுக்கச்சென்ற தன்னை தகாத வார்த்தைகளில் பேசி கொலை மிரட்டல் விடுத்ததாக பெண் எஸ்.ஐ மகேஸ்வரி அளித்த புகாரில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.