கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே ஏ.குமாரமங்கலம் ஜிஎஸ்டி சாலையில் டிராக்டர் டிப்பர் மீது பார்சல் லாரி மோதிய விபத்தில்...
டிராக்டர் ஓட்டுநர் இருக்கையுடன் தூக்கி வீசப்பட்டு தலையில் ஏற்பட்ட பலத்த காயத்தால் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.
பார்சல் லாரி நிற்காமல் சுமார் 100 மீட்டர் தூரம் டிராக்டரை இழுத்துச் சென்று பாலத்தில் மோதி நின்றது.
பார்சல் லாரி பிரேக் செயலிழந்ததால் விபத்து நேரிட்டதாக காயமடைந்த அதன் ஓட்டுநர் போலீசாரிடம் கூறியுள்ளார்.