குடுகுடுப்பைக்காரன் வேடமிட்டு வாக்கு சேகரிக்க சென்ற திமுக தலைமைகழக பேச்சாளர் ஜக்கம்மா கோவிந்தன் , பெண்களிடம் வசமாக மாட்டிக் கொண்டார். சராமாரிக் கேள்விகளால் ஜக்கம்மாவை சல்லி சல்லியாக நொறுக்கிய சம்பவம் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தித்தொகுப்பு...
தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி பேரூராட்சியில் திமுக சார்பில் தலைமைக் கழக பேச்சாளர் சேலம் கோவிந்தன், குடுகுடுப்புக்காரன் வேஷம் போட்டு வீதிகளில் வாக்கு சேகரித்தார்.
அப்போது மோடி அரசால், பெட்ரோல் டீசல், கேஸ் சிலிண்டர் எரிவாயு விலை உயர்வு, ஜிஎஸ்டி வரியால் மக்கள் அவதி படுவதாக ஜக்கம்மா சொல்வதாக கூறிக் கொண்டே பெண்களிடம் பிரச்சாரம் மேற்கொண்டார்
அப்போது ஒரு முதலில் ஒயின் ஷாப்பை மூட சொல்லுங்க, இதனால் பல உயிரிழப்புகள் ஏற்படுகின்றது, ஆட்சிக்கு வந்தால் மூடுவேன்னு சொன்னாரே ஏன் செய்யலன்னு கேள்வி எழுப்பினார்
வட மாநிலத்தவர்கள் அதிக அளவில் தமிழகத்தில் ஊடுருவி உள்ளனர், இதனால் தமிழக இளைஞர்களுக்கு படித்த ஏழை எளிய மக்களுக்கு வேலைவாய்ப்பு கிடையாது, எங்க வீட்டு பிள்ளைகள் வேலையில்லாம இருக்குன்னு ஆவேசமானார்
பூண்டு விலை 400 ரூபாயிடுச்சி என்று விலைவாசி உயர்வை பட்டியலிட்டு ஒரு பெண் ஜக்கம்மா கோவிந்தனை ஒரு பிடி பிடிக்க.. அது மோடிம்மா.. மோடி தான் காரணம் என்று மன்றாடும் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டார் ஜக்கம்மா கோவிந்தன்
நிலமை மோசமாவதை உணர்ந்த உடன் வந்த திமுக நிர்வாகி ஒருவர் டைம் ஆச்சு அடுத்த ஏரியாவுக்கு கிளம்பலாம் எனக்கூறியதும் அங்கிருந்து கூட்டத்துடன் ஜகா வாங்கினார் ஜக்கம்மா கோவிந்தன்