ஜெயம் ரவி நடித்துள்ள சைரன் படத்தின் முன்னோட்ட விழா கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் நடந்தது. நிகழ்ச்சியில் மாணவர்களுடன் கலந்துரையாடிய ஜெயம் ரவி தனது ஒரு தலை காதல் அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்.
ஜெயம் ரவி மாறுபட்ட வேடத்தில் நடித்துள்ள சைரன் படத்தின் முன்னோட்ட நிகழ்ச்சி கோவை இந்துஸ்தான் கல்லூரியில் நடந்தது. இதில் பங்கேற்ற நடிகர் ஜெயம்ரவி , காதலர் தின வாழ்த்துகளை தெரிவித்து கொண்டதோடு,என்னுடைய காதலர் தினத்தை விட்டு விட்டு இங்கு வந்துள்ளேன் என்றும் மாணவர்கள் தேர்வில் தோற்றால் தப்பில்லை, வாழ்க்கையில் தோற்றால் தான் தப்பு என்று மாணவ, மாணவிகளுக்கு அறிவுரை கூறினார்
அவரிடம் காதலர் தினம் குறித்து கேட்டதற்கு, காதல் அனைத்தையும் கடந்த ஒன்று அனைவரையும் மதிக்க வைக்கிறது என்றார். 18 வயதில் சிங்கிள் சைடு காதல் இருந்த போது "மன்றம் வந்த தென்றலுக்கு" என்ற மவுன ராகம படத்தில் இடம்பெற்ற பாடலை பாடினார்.
மாணவர்களின் கோரிக்கைக்கிணங்க மேடையில் நடனமாடிய ஜெயம் ரவி, மாணவர்களை தம்பிகள் என்று அன்போடு அழைத்தார். தம்பியுடையான் படைக்கு அஞ்சான் என்பது பழமொழி... நான் கூறுகிறேன் "அண்ணன் உடையான் எதற்கும் அஞ்சான்" என கூறினார்.
தொடர்ந்து சைரன் படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டது. சைரன் படம் அப்பா மகள் பாசத்தை எடுத்துரைக்கும் படம் எனவும் 15 ஆண்டுகளாக அப்பாக்களுக்கு நடக்க கூடிய கதை இது எனவும் அனைவரும் இந்த படத்தை விரும்புவர் எனவும் ஜெயம் ரவி தெரிவித்தார். இந்த படத்தில் ஜெயம் ரவியின் மகளாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.