நெல்லை மாவட்டம் களக்காடு-முண்டந்துறை வனச்சரகத்தில் விடப்பட்ட அரிக்கொம்பன் யானை இறந்துவிட்டதாக சமூக வலைதளங்களில் பரவும் செய்தி உண்மையில்லை என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
யானையின் உடலில் ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் அது ஆரோக்கியமாக இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.