ஜேக்டோ ஜியோ அமைப்பினர் நாளை ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் அறிவித்துள்ள நிலையில், துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு எச்சரித்துள்ளது.
பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்துவது, மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் அறிவித்துள்ளவர்களிடம் அமைச்சர் தங்கம் தென்னரசு பேச்சுவார்த்தை நடத்தினார்.
நிதி நிலை சரியானதும் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என அவர் கூறியதை ஏற்க மறுத்து, ஆசிரியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ளனர்.
இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபடும் நாள் வேலை செய்யாத நாளாகக் கருதப்பட்டு, ஊதியம் தரப்பட மாட்டாது என்றும் துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தலைமைச் செயலாளர் ஷிவ்தாஸ் மீனா எச்சரித்துள்ளார்.