பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளாக 14 செயின் பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்டு தப்பிய நபர், 15 ஆவதாக செய்த செயின் பறிப்பில் சிசிடிவி பதிவுகளால் சிக்கியதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷ்யாமளாதேவி தெரிவித்தார்.
தொடர் செயின் பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்ட ராமு என்பவரை தனிப்படை போலீசார் கைது செய்து, 22 லட்சம் ரூபாய் மதிப்பிலான 45 சவரன் தங்க நகைகளையும், இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.