தருமபுரி மாவட்டம், திம்மம்பட்டி கூட்டுறவு சர்க்கரை ஆலையில் விதிமுறைகளை மீறி லாரியில் ஏற்றி வந்த கரும்பினை முதலில் அரவைக்கு அனுமதிப்பதாக விவசாயிகள்,வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்..
ட்ராக்டரில் ஏற்றிவரப்பட்ட விவசாயிகளின் கரும்பிற்கு ஒரு வாரத்திற்கும் மேலாக காலம் கடத்தி அரவைக்கு அனுமதிப்பதாகவும் இதனால் கரும்பின் எடை குறைந்து விவசாயிகளின் வாழ்வாதாரங்கள் பாதிக்கப்படுவதாக வேதனை தெரிவித்தனர்.
மேலும் லாரி உரிமையாளர்கள் தங்களது சுயலாபத்திற்காக டிராக்டர்களில் ஏற்றி வரும் கரும்புகளை இறக்க விடாமல் தடுத்து வருவதாகவும் குற்றம் சாட்டுகின்றனர்.