சிதம்பரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நோயாளிகளை வெளியேச் சென்று மருந்து மாத்திரைகள் வாங்கி வரச் சொல்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளதாகவும்,
அவ்வாறு சொல்பவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
கல்லூரியில் 18 கோடி ரூபாய்க்கு புதிய கட்டடங்கள் கட்டுவதற்காக அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்துடன் இணைந்து அடிக்கல் நாட்டிய பிறகு மேடையில் இதனை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.