மலை பிரதேசங்களில் விளையக் கூடிய மிளகை சமவெளிப் பகுதியில் பயிரிட்டு மகசூல் எடுத்துள்ளதாக புதுச்சேரியை சேர்ந்த பெண் விவசாயி தெரிவித்துள்ளார்.
தாம் கண்டுபிடித்த புதிய மிளகு ரக பயிரை கூடப்பாக்கத்தில் உள்ள தனது பண்ணையில் அடர் நடவு முறையில் நடவு செய்துள்ளதாக கூறியுள்ள ஸ்ரீலட்சுமி என்ற அந்த விவசாயி, வழக்கமான முறையில் 4 ஆண்டுகளுக்குப் பிறகே அறுவடை செய்ய முடியும் என்ற நிலையில், தமது அடர் நடவு மூலம் 18 மாதங்களிலேயே அறுவடையை துவங்கி விடலாம் என குறிப்பிட்டுள்ளார்.