கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து தினமும் 500க்கும் மேற்பட்ட லாரிகளில் கனிம வளங்கள் கேரளாவுக்கு கடத்தப்பட்டு வருவதாகவும், திரும்பி வரும் போது அதே லாரிகளில் கோழி கழிவுகள் கொண்டுவந்து கொட்டப்படுவதால், குமரி மாவட்டம் குப்பை கிடங்காக மாற்றப்பட்டுவருவதாக முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் குற்றம்சாட்டியுள்ளார்.