மதுரை, கீழக்கரை ஏறுதழுவுதல் அரங்கத்தில் நடைபெற்ற முதல் ஜல்லிக்கட்டுப் போட்டியில் வெற்றி பெற்ற மாடுபிடி வீரர்கள் மற்றும் காளைகளின் உரிமையாளர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தங்க மோதிரங்களை பரிசாக வழங்கினார்.
போட்டியின் நிறைவில் சிறந்த வீரர் மற்றும் காளையின் உரிமையாளருக்கு தலா மகேந்திரா தார் கார் பரிசாக வழங்கப்பட உள்ளது. தமிழக அரசின் சார்பில் முதல் இடத்தை பிடிக்கும் மாடு பிடி வீரர் மற்றும் காளையின் உரிமையாளருக்கு தலா ஒரு லட்ச ரூபாயும், இரண்டாம் இடத்திற்கு தலா 75 ஆயிரம் ரூபாயும், மூன்றாம் இடத்திற்கு தலா 50 ஆயிரம் ரூபாயும் ரொக்கப்பரிசாக வழங்கப்படுகிறது.