பரந்தூர் விமான நிலையத்துக்கான இடத்தை மாநில அரசு தேர்வு செய்து தந்ததால் விவசாயிகள் உடனான பிரச்சினைக்கு மாநில அரசு தான் சுமூக தீர்வு காண வேண்டும் அல்லது வேறு இடத்தை தேர்வு செய்து தர வேண்டும் என மத்திய விமான போக்குவரத்து துறை இணை அமைச்சர் வி.கே.சிங் தெரிவித்துள்ளார்.
நெல்லை மாவட்டம் சி.என்.கிராமத்தில் மத்திய அரசின் திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பங்கேற்ற வி.கே.சிங், தூத்துக்குடி விமான நிலைய விரிவாக்க பணிகள் விரைவில் நிறைவடையும் என்றார்