ஜல்லிக்கட்டில் களம் இறங்கும் காளைகளை ஒரு விளையாட்டு வீரனைப் போல 2 மாதங்களாக சத்தான உணவு மற்றும் பயிற்சி வழங்கி பராமரித்து வருவதாக மாடு வளர்ப்போர் தெரிவித்தனர்.
பேரீட்சை பழம், கோதுமை தவிடு, பருத்தி கொட்டை, சுண்டைக் கடலை, நவதானியம் ஆகியவற்றை மாடுகளுக்கு உணவாக வழங்குவதோடு, நீச்சல், நடை பயிற்சி மற்றும் சண்டைப் பயிற்சியும் அளித்ததாக கூறினர்.
ஜல்லிக்கட்டு மாடுகள் கால்நடை கிடையாது அது தங்களது வீட்டின் குழந்தை மாதிரி என தெரிவித்த காளை வளர்ப்போர், தமிழர்களின் பராம்பரியத்தை அடுத்த தலைமுறைக்கும் எடுத்துச் செல்லவே காளை வளர்த்து வருவதாக தெரிவித்தனர்.