அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு திருச்செந்தூரிலுள்ள ஆஞ்சநேயர் கோவிலில் நடந்த சிறப்பு பூஜையையொட்டி ஏராளமான பக்தர்கள் இளநீரை பல்லால் உரித்து தலையில் உடைத்து பக்தி பரவசத்தை ஏற்படுத்திய சம்பவம் பக்தர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
அனுமன் பக்தர்களின் பக்தி பரவசமிக்க இளநீர் உரிப்பு ஆட்டம் தான் இந்த காட்சிகள்..!
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரிலுள்ள ராமதூத யோக ஆஞ்சநேயர் கோவிலில் அனுமன் ஜெயந்தி முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.
பூஜை முடிந்த கையோடு, கோவில் முன்பு குவித்து வைக்கப்பட்டிருந்த 300-க்கும் மேற்பட்ட செவ்விளநீர்களை அருள் வந்த அனுமன் பக்தர்கள் தங்களின் பல்லால் உரித்து, தலையில் உடைத்து அனுமார் பாவனை செய்தனர்.
இளம் பக்தர்களுக்கு போட்டியாக பெண் பக்தைகளும் இளநீரை பல்லால் உரித்து, அனுமார் பாவனை செய்தனர்.
இந்த காட்சி அங்கு சுற்றி இருந்த பக்தர்களிடையே பக்தி பரவசத்தை ஏற்படுத்தியது.