சென்னை நந்தம்பாக்கத்தில் நடைபெற்று வரும் உலக முதலீட்டாளர் சந்திப்பில், ஹைட்ரஜனில் இயங்கும் வாகனங்கள் மற்றும் பேட்டரி மூலம் இயங்கக்கூடிய டபுள் டக்கர் பேருந்து காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.
அடுத்த தலைமுறை வாகனங்கள் என்ற தலைப்பில் காட்சிப்படுத்தப்பட்டிருந்த பேட்டரியில் இயங்கும் டபுள் டக்கர் பேருந்தை ஒரு மணி நேரம் சார்ஜ் செய்தால் 200 கிலோ மீட்டர் தூரம் வரை பயணிக்கலாம் என கூறப்படுகிறது.
ஹைட்ரஜன் பேருந்து உள்ளிட்ட கனரக வாகனங்களும், பேட்டரி மற்றும் டீசல் மூலம் இயங்கும் புல்டோசர் இயந்திரமும் பார்வையாளர்களை கவர்ந்தது.