செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

அவங்க அழகா இருப்பாங்க.. சிறையில் பூத்த நட்பூ கொலையில் முடிந்தது ..! ஒரு நிமிஷம் தலையே சுத்திருச்சாம்..!

Jan 06, 2024 11:26:50 AM

கோவையில் பெண் தெரபிஸ்ட் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் சிறையில் அவருடன் நெருங்கிப்பழகிய தோழி ஆண் நண்பருடன் கைது செய்யப்பட்டுள்ளார். கூடா நட்பு கேடான பின்னணி குறித்து விவரிக்கின்றது இந்த செய்துத்தொகுப்பு

 கோவை , செட்டிபாளையம், அபிராமி நகரை சேர்ந்தவர் தனலட்சுமி , பிசியோதெரப்பிஸ்ட்டான இவர் கடந்த 31 ஆம் தேதி வீட்டில் தனியாக இருந்துள்ளார். வேலைக்கு சென்றிருந்த கணவர் பாலா, திரும்பி வந்து பார்த்த போது தனலட்சுமி மூக்கு மற்றும் வாயில் இரத்தம் வடிய சடலமாக கிடந்தார். அவரது கழுத்தில் இருந்த 8 பவுன் செயின் மற்றும் செல்போன் திருடு போனது தெரியவந்தது.

கணவர் பாலா செட்டிபாளையம் போலீஸில் தகவல் அளித்தார். விரைந்து வந்த போலீஸார் தனலட்சுமி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீஸார் 5 தனிப்படை அமைத்து மர்ம நபர்களை தேடி வந்தனர். அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது, சம்பவத்தன்று பெண் உட்பட இருவர் தனலட்சுமி வீட்டிற்கு சென்று விட்டு மீண்டும் மதிய வேளையில் கிளம்பியது தெரியவந்தது.

இதையடுத்து அப்பகுதியில் பதிவான செல்போன் சிக்னல், மற்றும் சிசிடிவி காட்சிகளை வைத்து பொள்ளாச்சி ஆனைமலை காட்டூரில் பதுங்கியிருந்த சந்திர ஜோதி என்ற 41 வயது பெண்ணையும் அவரது காதலன் சுரேஷ் என்பவரையும் கைது செய்து கோவை அழைத்து வந்தனர். பாலியல் தொழிலாளியான சந்திரா ஜோதி கடந்த ஆண்டு சரவணம்பட்டி போலீசாரால் பாலியல் வழக்கில் கைதாகி சிறைக்கு சென்றுள்ளார். அங்கு பெரியகடை போலீசாரால் பாலியல் வழக்கில் கைதாகி சிறையில் இருந்த பிசியோதெரபிஸ்ட் தனலட்சுமியின் அழகை புகழ்ந்து நட்பு ஏற்படுத்தியதாக கூறப்படுகின்றது.

அப்போது தனலட்சுமி , தன்னை செல்வ சீமாட்டி போல காட்டிக் கொண்டதாகவும், மசாஜ் செண்டர் நடத்தியதால் தன்னை போலீசார் கைது செய்து அழைத்து வந்து விட்டதாகவும் கூறி உள்ளார். இதனால் ஜெயிலில் இருந்து வெளியில் வந்த பின்னர் சிறையில் பெற்ற செல்போன் நம்பர் மூலம் தனலட்சுமியை சந்திரஜோதி தொடர்பு கொண்டு தனது காதலன் உடன் வீடுதேடி சென்றுள்ளார். வீட்டில் அதிகளவு பணம் இருக்கும் என்றும் நினைத்து தனலட்சுமியின் கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டு வீடு முழுவதும் தேடியும் பணம் கிடைக்காதால் தனலட்சுமி கழுத்தில் அணிந்திருந்த 8 பவுன் நகை மற்றும் செல்போனை திருடி விட்டு தப்பிச் சென்றதாக சந்திர ஜோதி வாக்குமூலம் அளித்ததாக போலீசார் தெரிவித்தனர்.

இருவரை கைது செய்த போலீஸார் அவர்களிடம் இருந்து நகை மற்றும் செல்போனை பறிமுதல் செய்தனர். மேலும் இருவரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சேராத இடம் சேர்ந்து கூடா நட்பு வைத்தால் என்ன மாதிரியான நிலை ஏற்படும் என்பதற்கு இந்த சம்பவம் மற்றும் ஒரு உதாரணம்.


Advertisement
என்.எல்.சி முதல் அனல்மின் நிலையத்தை இடிக்கும் பணி தொடக்கம்..
வீட்டின் பூட்டை உடைத்து நகைகளை கொள்ளையடித்த இருவர் கைது.!
மழையால் சேறும் சகதியுமான கிராமச் சாலை - நாற்று நட்டு மக்கள் எதிர்ப்பு
லஞ்சம் வாங்கிய அரசு அதிகாரிகளுக்கு 2 ஆண்டு சிறை..
கும்பகோணத்திலிருந்து மீண்டும் காஞ்சி வந்தடைந்த ஏகாம்பரநாதர் கோயில் சிலைகள் .!
வேளாண்துறை அதிகாரிகளை சிறைபிடித்த கல்குவாரி ஊழியர்கள்.!
மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர்கள் மீது வழக்கு பதிவு.!
"இளங்கலை பட்டப்படிப்பை முன்கூட்டியே படித்து முடிக்கும் புதிய முறை" - யு.ஜி.சி தலைவர்
கைதியை அழைத்துச் செல்லும் போது போலீஸ் வாகனத்தில் மது அருந்திய எஸ்.எஸ்.ஐ சஸ்பெண்ட்
தடுப்பூசி போட்டுக்கொண்ட 10 மாதக் குழந்தை உயிரிழப்பு.. பெற்றோர் குற்றச்சாட்டு..!

Advertisement
Posted Nov 15, 2024 in சென்னை,Big Stories,

எலிக்கு வைத்த மருந்து.. இரு குழந்தைகள் பலி.. பெஸ்ட் கண்ட்ரோல் செய்தது சரியா? வங்கி மேலாளார் வீட்டில் நடந்தது என்ன ?

Posted Nov 14, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஒற்றை மனிதனும் 100 ஏக்கர் காடும் 1 லட்சம் அரிய வகை மரங்கள் 240 பறவை இனங்களின் வாழ்விடம்

Posted Nov 14, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

“எங்க அம்மாவுக்கு சரியாக ட்ரீட்மெண்ட் கொடுக்கலை அதான் கத்தியால குத்தினேன்”..! கலக்கத்தில் அரசு மருத்துவர்கள்

Posted Nov 13, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

சன்னியாச வாழ்க்கையில் இருந்து சம்சார வாழ்க்கைக்கு திரும்பிய ஆதீனத்தை விரட்டிய மக்கள்..! சூரியனார்கோயில் மடத்துக்கு பூட்டு..

Posted Nov 12, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

மாணவிகளுக்கு பாலியல் கொடுமை.. பள்ளி நிர்வாகிகளுக்கு நெஞ்சுவலியாம்.. மருத்துவமனையில் படுத்துக் கொண்டனர்..! போக்சோவில் கைதானவர்கள் “லைவ் ஆக்டிங்”


Advertisement