திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில் கூலிப்படை வைத்து 80 வயது விவசாயி ஒருவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் அவரது தங்கை மகன் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
காளிவலசு பகுதியைச் சேர்ந்த விவசாயி சோமசுந்தரத்தை காணவில்லை என்ற புகார் குறித்து விசாரித்த போலீசார், சொத்து விவகாரத்தில் இருந்த முன்விரோதம் காரணமாக அவரது தங்கை மகன் கொற்றவேலிடம் விசாரணை நடத்தினர்.
அப்போது, தான் ஆக்கிரமித்து வைத்திருந்த 9 ஏக்கர் நிலத்தை நீதிமன்றம் மூலம் சோமசுந்தரம் மீட்ட ஆத்திரத்தில், அவரது தோட்டத்தில் வேலை பார்த்து வந்த பழனிச்சாமி மகனுக்கு பெண் பார்க்கலாம் என்று கூறி நம்ப வைத்து அழைத்துச் சென்று சோமசுந்தரத்தை கழுத்தை நெறித்து கொலை செய்ததாக போலீசாரிடம் வாக்குமுலம் அளித்துள்ளார்.
இதனையடுத்து கொற்றவேல் அவரது மனைவி விசாலாட்சி உள்ளிட்டோரை கைது செய்த போலீஸார், நொய்யல் ஆற்றில் வீசப்பட்டதாக கூறப்படும் சடலத்தை தேடி வருகின்றனர்.