சென்னையை அடுத்த வேலப்பன்சாவடியில் காரை பழுது நீக்கம் செய்து தருவதற்கு அதிக காலம் எடுத்துக் கொண்டதால், பில் தொகை 40 ஆயிரத்தை சில்லரை நாணயங்கள் மற்றும் 10, இருபது ரூபாய் நோட்டுகளாக மூட்டையில் கொண்டு வந்து ஊராட்சி மன்றத் தலைவர் ஒருவர் வழங்கினார்.
தொழுதாவூர் ஊராட்சி மன்ற தலைவர் அருள் முருகன், வேலப்பன்சாவடியில் உள்ள ஹர்ஷா டொயோட்டா நிறுவனத்தில் கடந்த ஒரு மாதத்திற்கு முன் தனது இனோவா காரை சர்வீஸ் செய்வதற்காக கொடுத்துள்ளார்.
வேலை முடிந்து விட்டதாக கூறி அருள்முருகனை வரவழைத்து அலைகழிப்பு செய்து வந்ததாக கூறப்படுகிறது.
இதனையடுத்து, நிறுவனம் வழங்கிய பில் தொகைக்கு அருள்முருகன் வழங்கிய சில்லரை நாணயங்களை நிறுவன ஊழியர்கள் எண்ணி சரிபார்த்தனர்.