சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டிய முதலமைச்சர், 184 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.
தூய்மைப் பணியாளர் நல வாரிய உறுப்பினர்கள் மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட இருளர் பழங்குடியினர் பயனாளிகளுக்கு ரூபாய் 78 கோடி ரூபாய் மதிப்பிலான 943 புதிய வீடுகளையும் முதலமைச்சர் வழங்கினார்.