சென்னை தியாகராய நகரில் தனது கார் மீது அடையாளம் தெரியாத நபர் ஒருவர் மோதிய சம்பவத்தின் போது, தனது கையில் இருந்தது கிரீன் டீ கோப்பை எனவும், அது மது அல்ல எனவும் திரைப்பட இயக்குநர் விஜய் விளக்கம் அளித்துள்ளார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், சம்பந்தப்பட்ட நபர் மது போதையில் தவறான திசையில் வந்து தனது காரின் இடதுபுற கண்ணாடியில் இடித்ததாகவும், ஹெல்மெட்டை கொண்டு தனது கார் பேனட்டில் அடித்ததாகவும் தெரிவித்தார்.