மழை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு காப்பாற்றப்பட்ட ஆடு, மாடுகளுக்கு கோல்ட் ஷாக் எனப்படும் குளிர் பாதிப்பு உண்டாக வாய்ப்பு உள்ளதால் அவற்றை சூரிய ஒளி படும்படி வைக்க வேண்டும் என கால்நடை மருத்துவர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளரை சந்தித்த ஸ்ரீவைகுண்டம் கால்நடை மருத்துவமனை மருத்துவர் சுரேஷ், , கோழிகளுக்கு நோய் தொற்று ஏற்படக்கூடும் என்பதால் தடுப்பூசி செலுத்தியும், கால்நடைகளின் உடலில் நீர் படாமலும் பராமரிக்க வேண்டும் எனக் கூறினார்.