வெள்ளம் வடிந்து வருவதையடுத்து நெல்லை, கன்னியாகுமரி மாவட்டத்தில் முழு அளவில் பேருந்துகள் இயக்கப்படுவதாக அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
நெல்லை வண்ணாரப்பேட்டையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அரசு போக்குவரத்து பணிமனையில் ஆய்வு செய்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தூத்துக்குடி மாவட்டத்தில் சாலைகள் சேதமடைந்துள்ளதால் 55 சதவீத பேருந்துகள் இயக்கப்படுவதாக கூறியுள்ளார்.
4 மாவட்ட பணிமனைகளில் 10 கோடி ரூபாய் அளவுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.