சுதந்திரத்துக்கு முன்பு இருந்த நிலையிலேயே சென்னை வானிலை ஆய்வு மையம் உள்ளதாகவும் அதனை மூடிவிடலாம் என்றும் பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறினார்.
நெல்லையில் மழை வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளத் தேவையான திட்டங்களில் மத்திய, மாநில அரசுகள் முதலீடு செய்ய வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.