தஞ்சாவூரில், மாடு மீது இருசக்கர வாகனம் மோதி படுகாயமடைந்த காவல் உதவி ஆய்வாளர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
கடந்த செவ்வாய்கிழமை, பணி முடிந்து இரவில் வீட்டிற்கு திரும்பிக்கொண்டிருந்த சிறப்பு எஸ்.ஐ., செந்தில்குமார், சாலையின் குறுக்கே மாடு இருப்பது தெரியாமல் இருசக்கர வாகனத்தில் மோதியதாக கூறப்படுகிறது.
தஞ்சாவூரில், சாலையில் சுற்றித்திரியும் மாடுகளால் நேர்ந்த விபத்துகளில் சிக்கி இதுவரை 4 பேர் உயிர் இழந்ததாகவும், மாடுகளை சாலையில் சுற்றி திரிந்தால் அபராதம் விதிக்கப்படும் என மாநகராட்சி விடுத்த எச்சரிக்கையை மாட்டு உரிமையாளர்கள் பொருட்படுத்துவது இல்லை எனவும் மக்கள் வேதனை தெரிவித்தனர்.