தென் மாவட்டங்களில் வெள்ள நீர் வடிந்து வருவதால் மக்கள் குடிநீரை காய்ச்சி பருக வேண்டுமென அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னை விருகம்பாக்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கிறிஸ்துமஸ் தொகுப்பு வழங்கிய சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் குடிநீர் குழாய்களில் தண்ணீர் வராததால், மக்கள் தங்களின் சொந்த நீராதாரமான கிணறு, போர்வெல் மூலம் கிடைக்கும் நீரை பருகி வருவதாக தகவல் கிடைத்துள்ளது.
இதுபோன்ற அசாதாரண சூழ்நிலையில் நீரை காய்ச்சாமல் குடித்தால் டையரியா போன்ற பாதிப்புகள் ஏற்படும் என அமைச்சர் தெரிவித்தார்.