இயற்கை வளங்களை நாசமாக்கியிருப்பதால் பெருமழை, வெள்ளத்தை நாம் சந்தித்து வருவதாக சீமான் தெரிவித்தார்.
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி மாவட்டம் பொன்னாகுறிச்சி, வெள்ளூர் பகுதியில் பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்கிய நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், இனிமேல் நம்மாழ்வார் சொன்னது போல் பெருமழை, புயல் மழை தான் வரும் எனவும், அந்த சூழ்நிலைகளை நாம் எதிர்கொண்டு தான் ஆக வேண்டும் எனவும் கூறினார்.