தூத்துக்குடி மாவட்டம் கருங்குளம் அருகே மூன்று நாட்களுக்கு முன்பாக காணாமல் போன நபரை தேட நடவடிக்கை எடுக்கும்படி அமைச்சர் எ.வ. வேலுவிடம் கிராம மக்கள் முறையிட்டனர்.
தாதன்குளத்தை சேர்ந்த சர்க்கரை பீர் முகமது என்பவர் உடன்குடியில் வேலை செய்து வரும் நிலையில், ஞாயிற்றுக்கிழமை கருங்குளத்திற்கு வந்து அங்கிருந்து தனது வீட்டிற்கு திரும்பியபோது வெள்ளத்தில் சிக்கியதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், ஸ்ரீவைகுண்டம் செல்வதற்காக அவ்வழியாக வந்த அமைச்சரின் வாகனத்தை வழிமறித்து கிராம மக்கள் முறையிட்டதையடுத்து, மீட்பு பணிகளுக்காக வந்த இந்திய ராணுவ வீரர்கள் சர்க்கரை பீர்முகமதுவை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.