முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை தூத்துக்குடியில் வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமரை சந்திக்க டெல்லி சென்ற முதலமைச்சர், நேராக இன்று தூத்துக்குடி சென்று ஆய்வு மேற்கொள்வார் எனக் கூறப்பட்டது.
ஆனால் இன்று மத்தியக் குழு தூத்துக்குடியில் ஆய்வு மேற்கொள்ள உள்ளதாலும் மாவட்ட நிர்வாகம் அவர்களுடன் இருக்க வேண்டியிருக்கும் என்பதாலும் முதலமைச்சரின் பயணத் தேதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி இன்று இரவு மதுரை செல்லும் முதலமைச்சர் நாளை தூத்துக்குடியில் ஆய்வு மேற்கொள்வார் என அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது.