தென்மாவட்டங்களில் மழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட உணவகங்கள், பேக்கரிகளை திறப்பதற்கு முன்பு பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு நெறிமுறைகளை உணவு பாதுகாப்புத்துறையினர் வெளியிட்டுள்ளனர்.
உணவகத்தைத் திறந்தவுடன், சமையலறை உள்ளிட்ட அனைத்து இடங்களையும் தூய்மையான தண்ணீர் கொண்டு, நன்றாக கழுவி, பிளீச்சிங் பவுடர் கொண்டு சுத்தம் செய்ய வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
கீழ்நிலை மற்றும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளில் தண்ணீரை முழுமையாக வெளியேற்றிய பிறகு, ப்ளீச்சிங் பவுடர் கொண்டு சுத்தம் செய்த பிறகு புதியதாக தண்ணீர் ஏற்ற வேண்டும்.
பழைய உணவுப் பொருட்களை அப்புறப்படுத்துவதோடு தயாரித்த இரண்டரை மணி நேரத்திற்குள் அதனை உட்கொள்ள வேண்டுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.