திருநெல்வேலி மாவட்டத்தில் தாமிரபரணி ஆற்றங்கரையோரம் உள்ள வண்ணாரப்பேட்டை பகுதியில் வெள்ளம் சூழ்ந்த நிலையில், கூட்டுறவு பண்டக சாலை கிடங்கில் இருந்த அரிசி, பருப்பு, சர்க்கரை உள்ளிட்ட பொருட்கள் நீரில் நனைந்து சேதமடைந்தன.
சுமார் 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்ததாக கூறப்படும் நிலையில், கிடங்கில் தேங்கிய வெள்ள நீர் தற்போது வடிந்துள்ளது.