தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் கண்ணுக்கு எதிரே அரசு மருத்துவமனை இருந்தும் சாலையில் மார்பளவுக்கு தண்ணீர் சென்றதால் பிரசவ வலியால் துடித்த பெண்ணை ராணுவ வீரர்கள் ஹெலிகாப்டர் மூலமாக மீட்டு மதுரைக்கு அழைத்துச் சென்றனர்.
கொங்கராயக்குறிச்சி பகுதியைச் சேர்ந்த அனுசுயா என்ற பெண்ணுக்கு பிரசவ வலி ஏற்பட்டதால் கார் மூலமாக அருகிலுள்ள ஸ்ரீவைகுண்டம் அழைத்து வரப்பட்டார்.
சாலையில் பெருக்கெடுத்து ஓடிய வெள்ளத்தைக் கடந்து அவர்களால் அரசு மருத்துவமனைக்குள் செல்ல முடியவில்லை என கூறப்படுகிறது.
பக்கத்தில் இருந்த உறவினர் ஒருவரது வீட்டில் தஞ்சமடைந்த அனுசுயா, ஹெலிகாப்டரில் உணவு வழங்கிய ராணுவ வீரர்களிடம் மொட்டை மாடியில் ஏறி நின்று உதவி கோரினார்.
இதனையடுத்து, ராணுவத்தினர் அனுசுயாவையும், அவரது கணவர், தாயார் மற்றும் ஒன்றரை வயது குழந்தையையும் மீட்டு மதுரை அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்காக சேர்த்தனர்.