திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டையில் மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களை மீட்ட மீனவர்களை அமைச்சர் தங்கம் தென்னரசு நேரில் சந்தித்து பாராட்டி நன்றி தெரிவித்தார்.
உவரி, கூத்தங்குழி, இடிந்தகரை, கூட்டப்புளி மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் சின்னமுட்டம், தூத்தூர் ஆகிய மீனவ கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் 400 பேர், 72 ஃபைபர் படகுகள் மூலம் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
அதிகளவு தண்ணீர் தேங்கிய ஜங்ஷன் பகுதி, கொக்கிரக்குளம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே சிந்தூப்பூந்துறை உள்ளிட்ட பல்வேறு இடங்களிலிருந்து ஏராளமான பொதுமக்களை மீட்டனர்.