மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட கனமழையால் பாதிக்கப்பட்ட சென்னை உள்ளிட்ட 4 மாவட்ட மக்களுக்கு 6 ஆயிரம் ரூபாய் நிவாரணத் தொகை வழங்கும் பணியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார்.
சென்னை வேளச்சேரி சக்தி விஜயலட்சுமி நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பயனாளிகளுக்கு நிவாரணத் தொகையை முதலமைச்சர் வழங்கினார்.
பின்னர், அருகில் இருந்த குறைதீர் விண்ணப்பங்கள் பெறுதல் மையம் மற்றும் உதவி மையத்தை முதலமைச்சர் பார்வையிட்டார்.
சென்னை மாவட்டத்தில் 13 லட்சத்து 72 ஆயிரம் பேர் உள்பட திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் மொத்தம் 24 லட்சம் பேருக்கு நிவாரணம் வழங்கப்பட உள்ளதாகவும், இதற்காக 1,486 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
தினசரி காலை 9 மணி முதல் 1 மணி வரையும், மதியம் 3 மணி முதல் மாலை 5 மணி வரையும் வெள்ள நிவாரணத் தொகை விநியோக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.