திருவள்ளூர் மாவட்டம் வள்ளூர்புரத்தில் மிக்ஜாம் புயல் நிவாரண டோக்கன்கள் வழங்குவது தொடர்பாக ரேஷன் கடை ஊழியர்கள் மற்றும் பொது மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
வீடு வீடாக செல்லாமல் ஓரிடத்தில் அமர்ந்து கொண்டு ரேசன் கடை ஊழியர்கள் டோக்கன்களை வழங்கியதால் அதிகளவில் மக்கள் கூட்டம் திரண்ட நிலையில் தங்களுக்கு முதலில் வழங்கும்படி அவர்கள் கோரினர்.
போதிய அளவில் காவலர்களை அமர்த்தி டோக்கன்களை முறையாக விநியோகிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருவள்ளூர், ஊத்துக்கோட்டை, பூந்தமல்லி,பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, ஆவடி உள்ளிட்ட 6 தாலுகாக்களில் 6ஆயிரம் ரூபாய் நிவாரணத்திற்கான டோக்கன்கள் இன்று ரேஷன் கடை ஊழியர்கள் மூலம் வீடு வீடாக வழங்கப்பட்டு வருகிறது.
பெருங்களத்தூரிலும் நிவாரண டோக்கன்களை வீடுகளுக்கு சென்று கொடுக்காமல் ஓரே இடத்தில் விநியோகம் செய்வதால் கூட்டம் கட்டுக்கடங்காமல் உள்ளது.
மேலும் டோக்கனை விநியோகம் செய்த ஊழியரை பொதுமக்கள் முற்றுகையிட்டு வாக்குவாதம் செய்தனர்.
பல்லாவரம் பொழிச்சலூர் பகுதியிலும் புயல் மழை சேத நிவாரண தொகைக்கான டோக்கன் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்டு வருகிறது.