உலகிலேயே இரண்டாவது அதிக மக்கள் தொகை கொண்ட இந்தியா, உணவு உற்பத்தியில் தன்னிறைவு அடைந்ததற்கு விவசாயிகளுக்கு நன்றி கூற வேண்டும் என்று தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி தெரிவித்தார்.
உலக ஒழுங்கை வடிவமைப்பதில் இந்திய கல்வித்துறையின் பங்கு என்ற தலைப்பில் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் நடந்த கருத்தரங்கில் பேசிய அவர், வேளாண்மை, தொழில் மற்றும் தொலை தொடர்பு துறையில் இந்தியா வேகமாக முன்னேறி வருவதாக கூறினார்.
அமெரிக்காவின் தனியார் ஆதிக்கம், ரஷ்யாவின் பொதுவுடமை போன்று அல்லாமல் இரண்டுக்கும் பொதுவான பொருளாதார கொள்கையை இந்தியா கடைபிடித்து வருவதே வளர்ச்சிக்குக் காரணம் என்றும் ஆளுநர் தெரிவித்தார்.