சென்னை, முகலிவாக்கம் திருவள்ளுவர் நகரைச் சுற்றியுள்ள பகுதிகளில் தேங்கிய மழை நீர் வடிந்து வருகிறது.
இதையடுத்து, வீட்டைப் பூட்டிவிட்டு வெளியேறிய குடியிருப்புவாசிகள் தங்கள் வீடுகளுக்குத் திரும்பத் தொடங்கியுள்ளனர்.
தரைத்தள வீடுகளில் வசிப்பவர்கள், வெள்ளத்தில் மூழ்கிய வீட்டையும், சேதமடைந்த பொருள்களையும் சீரமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
வீடுகளில் தேங்கிய மழை நீரால், வீட்டு உபயோகப் பொருள்கள், மின்சாதனங்கள், வாகனங்கள் பெருமளவில் சேதமடைந்துள்ளதாக அவர்கள் வருத்தம் தெரிவித்தனர்.
செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து தண்ணீர் திறக்கப்படுவது குறித்து முன்கூட்டியே தகவல் தெரிவிக்கப்படாததால் வீட்டில் உள்ள பொருள்களைப் பாதுகாக்க முடியவில்லை என அவர்கள் தெரிவித்தனர்.