அடுத்த தலைமுறைக்கான தலைமை உருவானால், அவனை தோல் மீது வைத்து சுமக்க தயாராகவும் இருப்பதாக, திருச்சியில் இன்று நடந்த திருச்சி தெற்கு மாவட்ட அணிகளுக்கான கூட்டத்தில் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் கூறினார்.
எந்த குறிப்பும் இன்றி, சட்டமன்றத்தில் அன்பில் மகேஸ் பேசியதைப் பார்த்து, திமுகவை வழிநடத்த எதிர்கால தலைவன் கிடைத்துவிட்டார் என கருதியதாகவும் துரைமுருகன் பேசினார்.
தமிழத்தின் மத்திய பகுதியில் அமைந்துள்ள திருச்சிதான் தமிழகத்தின் தலைநகராக இருக்க வேண்டும் என்றும் துரைமுருகன் வலியுறுத்தி பேசினார்.