திருவண்ணாமலையில் கார்த்திகை மகா தீபம் ஏற்றப்பட்டுள்ளது. 2 ஆயிரத்து 668 அடி உயரமுள்ள அண்ணாமலை மீது பிரம்மாண்டமான நெய்க் கொப்பறையில் தீபம் ஏற்றப்பட்டதும் மலையின் மீதும் அடிவாரத்திலும் கோயில் வளாகத்திலும் குழுமியிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் அரோகரா முழக்கம் எழுப்பினர்.
மகா தீபம் 11 நாட்கள் நின்று எரியும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தீபத் திருநாளை முன்னிட்டு திருவண்ணாமலை கோயில் மின்னொளியில் ஜொலித்தது.
மகா தீபம் ஏற்றப்பட்ட சில நிமிடங்களில் திருச்சி மலைக் கோட்டை, திருப்பரங்குன்றம், திருத்தணி, பழனி மலைகளில் தீபம் ஏற்றப்பட்டது.
சென்னை மயிலை கபாலீஸ்வரர், சைதை காரணீஸ்வரர், வடபழனி முருகன், கோவை தர்மலிங்கேஸ்வரர் கோயில்களிலும் மகா தீபம் கோலாகலமாக ஏற்றப்பட்டது.
ஜோதிர் லிங்கத் தலங்களில் தமிழ்நாட்டில் உள்ள ஒரே ஆலயமான ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலும் ஜோதி ஏற்றப்பட்டது.