இராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் பெய்த மழையால் விவசாய நிலங்களில் மழைநீர் தேங்கி சுமார் முந்நூறுக்கும் மேற்பட்ட ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த மிளகாய் பயிர்கள் நீரில் மூழ்கிய அழுகியதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஆய்வு செய்து, உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.