கோவையில் பள்ளி மாணவியிடம் வாட்சப்பில் ஆபாச புகைப்படம் அனுப்ப வலியுறுத்திய விளையாட்டு ஆசிரியரை மகளிர் போலீசார் போக்சோவின் கீழ் கைது செய்து நடவடிக்கை எடுத்தனர்.
அவினாசி சாலையில் இயங்கி வரும் தனியார் பள்ளியில் பேட்மிட்டன் பயிற்சியாளராக பணிபுரிந்து வந்த அருண் என்பவரிடம் அதே பள்ளியைச் சேர்ந்த 11ம் வகுப்பு படிக்கும் மாணவி பயிற்சி பெற்று வந்துள்ளார்.
பயிற்சியாளரும், மாணவியும் நட்பாக செல்ஃபோனில் வாட்சப் வாயிலாக பேசிவந்ததாக கூறப்படும் நிலையில் அவ்வப்போது புகைப்படங்களை ஷேர் செய்து கொள்வதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் மாணவியின் ஆபாச புகைப்படங்களை அருண் கேட்டதாக எழுந்த புகாரின் பேரில் போலீசார் அவரை கைது செய்தனர்.