போதைக் காளான், கஞ்சா வைத்திருந்த வழக்கில், 3 பேருக்கு தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மதுரை மாவட்ட போதைப் பொருள் தடுப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொடைக்கானலில் கடந்த 2022ஆம் ஆண்டு கஞ்சா மற்றும் போதைக்காளானுடன் 3 பேர் வாகன சோதனையில் பிடிபட்டனர்.
சந்தோஷ், ராஜபாண்டி மற்றும் கிளிப் அகஸ்டின் என்ற அந்த மூன்று பேருக்கும் தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனையுடன் தலா ஒரு லட்ச ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி செங்கமல செல்வன் உத்தரவிட்டுள்ளார்.