தமிழக ஆளுனரின் செயல்பாட்டை கடுமையாக விமர்சித்த ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ ஈவிகேஎஸ் இளங்கோவன் அதற்கு இணையாக தற்போதையை தமிழக காங்கிரஸ் தலைமையின் செயல்பாட்டையும் கடுமையாக சாடினார்.
ஒரு காலத்தில தமிழக காங்கிரஸ் தலைவராக கெத்தாக வலம் வந்த ஈ.வி.கே.எஸ். இளங்கோவனையே புலம்பும் நிலைக்கு தள்ளி இருப்பது வேறு யாருமல்ல... தற்போதைய தமிழக காங்கிரஸ் தலைவர் தான்..!
செய்தியாளர் சந்திப்பின் போது தமிழக ஆளுனரின் செயல்பாடுகள் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் அளித்த ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், ஆளுநருக்கு மூளை சரியில்லை என்றும் சிகிச்சைக்காக அவரை ஒரு மாதம் குற்றாலம் அனுப்ப வேண்டும் என்றும் சாடினார்.
காங்கிரஸ் சார்பில் நடந்த கூட்டம் குறித்த கேள்விக்கு பதில் அளித்த ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் , தமிழக காங்கிடஸில் என்ன நடக்கிறது என்பதே தெரியவில்லை என்றும் தன்னை மட்டுமல்ல, தங்கபாலு, திருநாவுக்கரசர், கிருஷ்ணசாமி என எவரையும் அழைப்பதில்லை என்றும் மர்ம கூட்டங்கள் நடத்தப்படுவதாகவும் ஆதங்கம் தெரிவித்தார்