திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே ஓடை புறம்போக்கில் கட்டப்பட்ட கோயிலை நீதிமன்ற உத்தரவின்படி இடிக்க வந்த அரசு அதிகாரிகளை பொதுமக்கள் தடுத்து நிறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
மினுக்கம்பட்டி பகுதியில் நீர்நிலை ஆக்கிரமிப்பில் கோயில் கட்டப்பட்டு சுமார் 40 ஆண்டுகளாக அப்பகுதி மக்கள் வழிபட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து கடந்த 2014ஆம் ஆண்டு தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற மதுரைக் கிளை கோயிலை இடிக்க உத்தரவிட்ட நிலையில், ஜேசிபி வாகனத்தை சிறைபிடித்து, கோயிலை இடிக்க விடாமல் வாக்குவாதம் செய்து வருகின்றனர்.
கரூர்- திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் கிராம மக்களில் ஒருவர், பெட்ரோலை தலையில் ஊற்றிக் கொண்ட நிலையில், தீயணைப்புத் துறையினர் தண்ணீர் பீச்சியடித்து அவரை தடுத்தனர்.