திருவாரூரில் தக்காளி சாதத்தில் கிடந்த ஸ்டாப்ளர் பின் குறித்து கேள்வி எழுப்பிய வாடிக்கையாளரை ஹோட்டல் உரிமையாளர் தாக்கியதாக புகார் எழுந்துள்ளது.
புறக்காவல் நிலையத்திற்கு அருகில் உள்ள ஸ்ரீகணேஷ் ஹோட்டலிலிருந்து, மகாலட்சுமி என்பவர் தக்காளி சாதம் பார்சல் ஒன்றை வாங்கி தனது மகன் சந்தோஷிடம் கொடுத்துள்ளார்.
அதில் ஸ்டாப்ளர் பின் கிடந்ததைக் பார்த்த அவர், சாப்பாடு பொட்டலத்துடன் சென்று கடை உரிமையாளர் கணேஷனிடம் காட்டி கேள்வி எழுப்பியுள்ளார்.
அதற்கு அவர் தங்கள் கடையில் ஸ்டாப்ளர் பயன்படுத்துவதில்லை எனக்கூறி உணவு பொட்டலத்தை குப்பைத்தொட்டியில் வீசியதுடன், தரைக்குறைவாக பேசி தாக்கியதாக காவல் நிலையத்தில் சந்தோஷ் புகார் அளித்துள்ளார்.