தேனி மாவட்டம் பெரியகுளத்தில் அனுமதி இல்லாமல் இயங்கி வந்த பட்டாசுக்கடை ஒன்றில் இருந்த அனைத்து பட்டாசுகளையும் பெண் காவல் ஆய்வாளர் ஒருவர் மொத்தமாக பறிமுதல் செய்ததால் வாக்குவாதம் ஏற்பட்டது.
தேனி மாவட்டம் பெரியகுளம் அம்பேத்கர் சிலை அருகே தீபாவளி தினத்தை முன்னிட்டு பல்வேறு பட்டாசு கடைகள் கடைகள் அமைக்கப்பட்டுள்ளளன.
இதில் யுவராஜ் என்பவர் அனுமதி இன்றி பட்டாசு கடை வைத்ததாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது .
யுவராஜ் பட்டாசு கடைக்குச் சென்று ஆய்வு மேற்கொண்ட பெண்காவல் ஆய்வாளர் தலைமையிலான போலீசார் பட்டாசு கடை நடத்த உரிமம் பெற்ற ஆர்டர் காப்பியை கேட்டனர்
கடைக்காரரோ தனக்கு எம்.எல்.ஏவை தெரியும் பேசுங்க என்று போன் போட்டுக் கொடுத்தார், அவரிடம் ஆர்டரை காட்டுங்க என்று பெண் காவல் ஆய்வாளர் கறாராக கூறியதால் வாக்கு வாதம் முற்றியது.
அனுமதியின்றி பட்டாசு கடை நடத்தியது தெரியவந்ததால் கடையில் இருந்த மூன்று லட்சம் மதிப்பிலான பட்டாசுகளையும் காவல்துறையினர் பறிமுதல் செய்து காரில் ஏற்றினர்
போலீசாருடன் கடை உரிமையாளர் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதையடுத்து அவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் சில கடைக்காரர்களும் ஆதரவாக குரல் கொடுத்தாலும், சட்டப்படி நடப்பேன் என்று அனைத்து பட்டாசுகளையும் கைப்பற்றி கடையை இழுத்துப்பூட்ட போலீசார் உத்தரவிட்டனர்