தீபாவளி பண்டிகைக்காக சொந்த ஊர் சென்றவர்கள் திரும்பிவர அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் இருப்பதாக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
தாம்பரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தீபாவளி பண்டிகைக்கு போக்குவரத்து தொழிலாளர்கள் அனைவரும் இரவு பகலாக பணியாற்றி வருவதாகவும், மக்கள் இரவுப் பயணங்களை பாதுகாப்புடனும், ஜாக்கிரதையாகவும் மேற்கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்தார்.