சென்னையில் பரவலாக பட்டாசு வெடிக்கத் துவங்கிய நிலையில், காற்று மாசுக் குறியீடு சராசரியாக 115ஆக பதிவாகியுள்ளது.
அதிகபட்சமாக பெருங்குடியில் 165ஆகவும் அரும்பாக்கத்தில் 136ஆகவும் பதிவாகியுள்ளது. பிற பகுதிகளைப் பொருத்தவரை வேலூர் மாவட்டத்தில் 113ஆகவும் காஞ்சிபுரத்தில் 77ஆகவும் காற்று மாசு குறியீடு பதிவாகியுள்ளது.